Counter

சனி, 4 நவம்பர், 2017

Posted Date : 14:11 (10/10/2015) Last updated : 17:22 (10/10/2015) 'இன்னும் ஏன் மௌனம்?' -இந்திய பிரதமருக்கு ஓர் இந்தியனின் கடிதம்!

திப்பிற்குரிய இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு,

நீங்கள் எப்போதாவது வந்து போகும் இந்தியாவில், கருப்பு பண பங்கு தொகை 15 லட்சம் வாங்கி, புல்லெட் ரயிலில் பயணிக்க காத்திருக்கும் ஒரு இந்தியனின் கடிதம் இது...

உங்கள் விமானம் எப்போதாவது இந்தியாவைக் கடந்து சென்றால், எட்டிப் பாருங்கள்... ஜன்னல் வழியே! எங்கும் பச்சை பசேல் என தெரிய வேண்டியவை கொஞ்சம் பச்சை, கொஞ்சம் கருப்பாக, வெளிர் மஞ்சளாக தெரியும். பருவ மழை பொய்த்த பின் பாழாய்ப் போன நிலங்கள் அவை

அந்த நிலங்களின் விவசாயிகளோ வானம் பார்த்து வறண்டவர்கள். மானியங்களைத் தொலைத்த மனிதர்கள். முடிவாக மானம் காக்க ஒரு முழ கயிற்றில் தொங்கி உயிர் விட துணிந்தவர்கள். 

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு. ஆனால் விவசாயியின் அடுத்த தலைமுறையினர், வேகமாக விவசாயத்தை விட்டு வெளியேறிக் கொண்டு இருக்கின்றனர். கடும் இன்னல்களுக்கு இடையே தவிக்கும் விவசாயிகளின்  கொஞ்ச நஞ்ச நிலங்களையும் உருவ முயற்சித்த தங்களின் நில சட்ட மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு பின்வாங்கி உள்ளது. ஆனால் இது உண்மையில் கைவிடப்பட்டதா ... அல்லது, மாநில தேர்தலுக்கான பதுங்கலா?  தங்களுக்கே மட்டுமே தெரிந்த ரகசியம். 

எனினும் விவசாயிகளின் கல்லறை மீது தொழிற்சாலைகள் கட்ட துணிய மாட்டீர்கள் என நம்புகிறோம். அடுத்த முறை வெளிநாடு செல்லும்போது அங்குள்ள விவசாயிகளைச் சந்தியுங்கள். (மறக்காமல் செல்ஃபி எடுத்துக்கொள்ளுங்கள்)

நாட்டின் பொருளாதாரம் தள்ளாடி, இந்தியா ரூபாயின் மதிப்பு தடுமாறிக்கொண்டிருக்கிறது. தங்களின் 56 இன்ச் மார்பு, இந்தியா பொருளாதரத்தை ஒரு இன்ச் கூட நகர்த்தவில்லை. ஒருமுறை முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொன்னார்... " உங்களின் பொருளாதார அறிவை ஒரு ஸ்டாம்ப் பேப்பரின் பின்னால் எழுதி விடலாம் " என்று. அதை நீங்கள் இந்திய தொழிலதிபர்கள் மாநாட்டில் நிரூபித்தீர்கள் தொழிலதிபர்கள் அனைவரும் பொருளாதார மந்த நிலையை பற்றி  கவலை எழுப்பியபோது , எப்படியாவது ரிஸ்க் எடுத்து முதலீடு செய்யுங்கள் என்றீர்கள். ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமராக இருப்பவருக்கு வேண்டியது தொலைநோக்கு பார்வை. ஆனால், தாங்கள் முயற்சிப்பதோ கேமராவுக்கான பார்வை.

நீங்கள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள் என உங்களுக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்க, நீங்களோ நிறைவேற்றத் துடிப்பது உங்களை உயர்த்திய அதானி, அம்பானிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை .... 

தொழில் வளர்ச்சி மட்டும் நாட்டுக்கு  வளர்ச்சியைக் கொடுக்காது என்பதை தற்போது தடுமாறும் சீன பொருளாதாரம் தங்களுக்கு உணர்த்தவில்லையா ? 

இந்திய வாக்காளர்களில் மூன்றில் இருவர் உங்களைத் தேர்ந்தேடுக்காவிட்டாலும் , 31 சதவீத வாக்குகள் வாங்கி, இந்திய பிரதமராக ஆனாலும், 100  சதவீத இந்தியர்களுக்கு நீங்கள்தான் பிரதமர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் பிரதிநிதி. அதனால்தான் உங்களுக்கு வெளிநாடுகளில் வீரிய வரவேற்பு . நரேந்திர மோடி எனும் தனி மனிதருக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால் உங்களது அடிப்பொடிகளின் போக்கு அடிப்படையே மாற்ற முயல்கிறார்கள். இஸ்லாமியர்களின் வாக்குரிமையை பறிப்பதில் இருந்து , சமூக நீதியையும், சமயச் சார்பின்மையும் அடித்து துவம்சம் செய்கிறார்கள் . ஆனால் எந்த ரியாக்ஷனும் இல்லை உங்களிடமிருந்து ...

எது நடக்கும் என அச்சப்பட்டார்களோ, அது நடந்து கொண்டு இருக்கிறது.. எந்த சலனமுமில்லை எங்கள் பிரதமரிடம் இருந்து ..

ஓய்வில்லாமல் உலகை சுற்றிவரும் நீங்கள் உலகம் மாறுவதை கவனிக்க தவறியது ஏனோ? உலகின் ஒரே இந்து நாடாக இருந்த நேபாளம் மதசார்பின்மையை பிரகடனப் படுத்தியுள்ளது. மத நம்பிக்கை அற்ற ரஷியாவில் கிறி ஸ்துவ ஆலயங்களை அதிபர் புதின் முன்நின்று திறக்கிறார். முஸ்லிம் நாடான ஐக்கிய அரபு நாடு இந்து கோயில் கட்ட அனுமதி அளிக்கிறது. இவர்களுக்கெல்லாம் மதம் ஒரு பொருட்டல்ல. வேறுபாடுகளைக் கடந்த அன்பும், அமைதியும் ஒரு தேசத்தை ஒருங்கினைக்கின்றன என்பதை அறிந்தவர்கள்.

ஆனால் மதசார்பின்மையையும், உலக அமைதியையும் வலியுறுத்திய இந்தியா எங்கு சென்றுகொண்டு இருக்கிறது?. கடிவாளம் உங்கள் கையில்தான் பிரதமர் அவர்களே ..

உ.பி யில் மாட்டு இறைச்சி உண்டதற்காக பி.ஜே.பி யினர் நடத்திய படுகொலை தேசத்துக்கு  தலைகுனிவைத் தந்திருக்கிறது. யார் என்ன உண்ண வேண்டும் என்பதை உலகின் மிகப்பெரிய சர்வதிகாரி ஹிட்லர் கூட தீர்மானிக்கவில்லை. 

ஆனால் தாங்கள் உங்களது கட்சியினர் செய்யும் மகா தவறுகளைக் கண்டிப்பதும் இல்லை. தண்டிப்பதும் இல்லை. தாங்கள் கொஞ்சி குலாவும் சமூக வலைதளங்களின்மூலம் கண்டனங்கள் தங்களை சென்று அடைந்திருக்கும். தங்கள் நண்பர் ஒபாமா சமூக வலைதளத்தில் உ.பி சம்பவத்தை கண்டிக்கிறார். ஆனால் உலகநாடுகளை சுற்றிவரும் நீங்கள் இன்னமும் இந்த உள்ளுர் விவகாரத்தில் கருத்து சொல்லவில்லை.

ஒருமுறை அரசின் அறநெறி தவறியதால் இன்னும் உங்களை துரத்துகிறது ஒரு கரு நிழல். பிறகு ஏன் இன்னும் இந்த மௌனம் ?

மௌனம் சம்மதத்தின் அறிகுறி என்பார்கள். உங்களின் இந்த மவுனத்திற்கும்  என் போன்ற அப்பாவி இந்தியர்கள் அதையே கற்பித்துக்கொள்ளலாமா?

இதற்கும் மவுனம் காத்துவிடாதீர்கள் பிரதமரே...

- அறந்தை அபுதாகிர்

சனி, 10 அக்டோபர், 2015

'இன்னும் ஏன் மௌனம்?' -இந்திய பிரதமருக்கு ஓர் இந்தியனின் கடிதம்!- published in Vikatan.com

மதிப்பிற்குரிய இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு,

வியாழன், 31 ஜூலை, 2014

புரிந்தது ... புரியாதது

சிட்டுக்குருவி

ஓட்டுக்கூரையினுள் ஒளிந்து,
வீட்டுத்தோட்டங்களில் விருந்துண்டு,
முற்றத்தில் விளையாடிய,
சுறுசுறுப்பு சிட்டுக்குருவியை,
சோம்பல் மனிதர்களின்,
செல்போன் கோபுரங்கள்,
அலைவீச்சில், கொலை செய்தன!
நன்றிக்கடனாய்,
கைதொலை பேசிகள்
கருமாதி செய்கின்றன!
 
காட்டுவாசிதொலைகாட்சி தொடர்களின் நாயகிகள் நலம்தானா?
நகம் கடித்து,வெற்றுப்பெட்டியை உற்றுப்பார்க்கும் பாட்டி,
சிறு நேரம் சுழலபோகும் காத்தடிக்காக
நெடு நேரம் உறங்க, அறையின் நடுவில் பாய் விரித்த அப்பா,
அடுத்த நாள் இட்லிக்காக அவசரமாக மாவரைக்க காத்திருக்கும்
கடமை தவறாத அம்மா,
கைபேசி கவிழ்த்துவிடுமோ? கனத்த நெஞ்சுடன் அண்ணன்,

வரும் தேர்வுகள் வருத்தமாக்கிவிடுமோ? 
வானத்தை பார்த்து கொண்டே நான்,
அவசரவிளக்கு உமிழும் அற்ப வெளிச்சத்தில்
குட்டி தம்பி படித்தான் 
"மின்சாரத்தை கண்டு பிடித்தது பெஞ்சமின் பிராங்கிளின் என்று"
கண்டதை தொலைத்தவர் யாரோ???
காரிருளில் வாழ்வதற்க்கு பதில்  காட்டுவாசியாய் பிறந்திருக்கலாம்.

முல்லைப் பெரியாறும் தேச ஒற்றுமையும்!- published in News Vikatan

- அறந்தை அபுதாகிர்

மிழகம் எப்போதும் தண்ணீருக்காக தவமிருக்க வேண்டும் என்பது தலைவிதி போலும். அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா வரிசையில் தற்போது கேரளமும் வரிந்துகொண்டு நிற்கிறது.

முல்லைப் பெரியாறு தீர்வுக்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு டிசம்பர் 5-தேதி இறுதி கட்ட கூட்டத்தை கூட்டப்பட வேண்டிய நிலையில், நீதியின் நியாமான பார்வையை தடுக்க முயல்கின்றது கேரளம், "அழுத பிள்ளை பால் குடிக்கும்," என அழிச்சாட்டியம் செய்கிறது.

கர்னல் பென்னி குக்கினால் கி.பி.1895-ல் கட்டி முடிக்கப்பட்டு, தென் தமிழகத்தை வளமாக்கிய முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என கூக்கிரலிடுகிறது கேரளா. நில நடுக்கத்தினால் அணை உடைந்து, கேரளாவின் 4 மாவட்டங்கள் அழிந்துவிடும் என பொய் பிரசாரத்தில் உச்சாஸ்தாயில் உளருகிறது, அம்மாநில அரசு.

உலக வரலாற்றில் இதுவரை அணைகள் உடைந்தற்கு காரணம், பெரும் மழையினால் ஏற்படுகின்ற வெள்ளமும், கட்டுமான குறைபாடுகளுமே.

சமீபத்தில் வெளிவந்த 'டேம் 999' என்ற திரைப்படம், சீனாவின் ஹீய் நதியின் குறுக்கே கட்டப்பட்ட பான்கியோ அணை 1975-ல் உடைந்ததை பற்றி கூறினாலும், இதன் இயக்குநர் சோகன் ராயின் கருத்துக்கள், முல்லைப் பெரியாறு அணை உடையப் போவதாக குறிக்கின்றன. இது ஒரு  பொய்ப் பிரசாரத்தின் தொழில் நுட்ப பரிமாண வளர்ச்சி. உண்மையில், இந்த பான்கியோ அணை உடைந்தற்குக் காரணம், சீனாவில் 1000 ஆண்டுகளில் ஏற்படாத ஒரு பெரும் மழையும், கட்டுமானத் தவறால் ஏற்பட்ட விரிசல்களும்தான்.

முல்லைப் பெரியாறு அணை 1994-ல் நவீன தொழில் நுட்பத்தால் மேம்படுத்தபட்டு மிகவும் உறுதியாக உள்ளது எனவும், ஒருவேளை அணை உடைந்தால், வெளியேரும் சுமார் 6 டிஎம்சி நீர் மலை பாதை வழியாக இடுக்கி அணையை அடையும். இதற்கும் சுமார் 4 மணி நேரம் பிடிக்கும் என ஆதாரங்களுடன் தமிழக முன்னாள் பொது பணியாளர் சங்கம் ஆணித்தரமாக கூறுகிறது.

மேலும், 1500 ஆண்டுகள் பழமையான கல்லணை நவீன தொழில் நுட்பத்தால் சீரமைக்கப்பட்டு இன்று வரை கம்பீரமாக நிற்ப‌தை எடுத்துரைக்கிற‌து.

இந்நிலையில், கேர‌ளாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பின‌ர்க‌ள் க‌ட்சி வேறுபாடின்றி இப்பிரச்னையை முன்வைத்து நாடாளுமன்ற வாயிலில் த‌ர்ணா போர‌ட்ட‌ம் ந‌ட‌த்திய‌ போது, ஒரு கூட்ட‌ம் டெல்லி பாட்டியலா நீதி ம‌ன்ற‌த்தில் ஜாமீனுக்கு கையெழுத்திட‌வும், ம‌று கூட்ட‌ம் "அம்மா இன்றி அணுவும் அசையாது," என அமைதி காத்த‌து.  எதிர்ப்புப் போர‌ட்ட‌த்தில் எஞ்சியது சில‌ பேர் ம‌ட்டுமே.

அணை உடைய‌ப்போகிற‌து என‌ கார‌ண‌ம் காட்டி, புதிய‌ அணை க‌ட்டுவோம் என‌ மார்தட்டி, முல்லைப் பெரியாறு ப‌குதியை முழுதாக‌ த‌ன் க‌ட்டுக்குள் கொண்டும் முய‌ற்சியை கேர‌ள‌ அர‌சு துவ‌ங்கி காய்க‌ளை ந‌க‌ர்த்துகிற‌து. உண்மையில் இது கேர‌ள‌ மின் உற்ப‌த்திக்காக‌வும், த‌மிழ‌க‌த்தை வ‌ஞ்சிக்க‌ வேண்டும் என் நோக்க‌மே த‌விர‌ வேறில்லை.

ஏறத்தாழ 10 ல‌ட்ச‌ம் த‌மிழ‌க‌ விவசாயிக‌ளின் வாழ்வார‌த்தை அழித்து, தென் த‌மிழ‌க‌த்தை மீண்டும் க‌ற்கால‌துக்கு அழைத்து செல்ல‌ முற்ப‌டும் கேர‌ளாவின் குறுகிய ம‌ன‌ப்பான்ம‌யை த‌மிழ‌க‌ம் த‌டுக்க‌ வேண்டும்.

மனிதத் த‌வ‌றினால் உடைய‌ப்போவ‌து அணைய‌ல்ல‌.. த‌மிழ‌க‌த்தின் எதிர்கால‌மும், இந்தியாவின் ஒற்றுமையும், இறையாண்மையும்தான்!

புல‌ம்ப‌ல்க‌ளும் முக்கிய‌ம்--published in youthful vikatan

விடிந்தது என் அறிவிக்கும் மணியோசை..
விதியென வேலைக்கு செல்லும் அவசரம்
வெந்ததை விழுங்கிவிட்டு, வேகாததை மென்றுவிட்டு
சாலைகளின் நெரிசலை காலையில் கடக்கும் துயரம்.
சிறு பிள்ளையின் அழுகை போல சிணுங்கும் செல்போன் அழைப்புகள்,
படுத்திவைக்கும் பணிச்சுமைகள்..
வளைகுடா வசந்தம் என்று எவன் சொன்னது???
தொல்லைகளுக்கு இடைவேளை விட்டு விடுமுறைக்கு வீடு திரும்பினால்
விழி நோக்கும் சுற்றம் விசாரிப்புகளுக்கு பின் வேண்டுவது
" விசா ஏதும் இருக்கா? "
இல்லையென‌ என் பதிலுரைக்கும் போது "பாருங்கள் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்"
என் காவிரியின் கோரிக்கை போல் நீளும்...
அருகில் வந்த சுற்றத்தின் செய்தி , தொலைவில் இருந்து உள் எரிச்சல் உடன்
உரசும் காதுகளை " பெரிய வீடு கட்டிப்புட்டானே"
நிம்மதிகள் இங்குதான் என இளைப்பாறும் போது சுள் என சுடும் கேள்விகள்
" எப்ப பயணம்? "
நாட்கள் நகர, இல்லத்தாளின் இயல்பும் மாறி , விழி அறிவிக்கும் விடை
தெரியா கேள்வி  " இங்கே இருந்திருவானோ?  "
விடுமுறையின் வெருப்பு ,கர்ப்ப காலம் இன்றி உடனே பிரசவிக்கும்
ஒடியாடும் செல்லமகள் , சிரித்து கொண்டே எச்சரிக்கை மணியடிப்பாள்
" நான் வளர்கிறேன் தந்தையே...."
எதிர் காலம் வளமாக, நிகழ் காலம் சுமையாக ,
அலுமினிய பறவையின் அடுத்த பயணத்திற்க்கு..
டிராவல் ஏஜண்டுகளின் அலுவலக வாசலில்..
எனது விடுமுறை இனிதே நிறைவேறியது..
உயிர் வாழ‌ காற்று , நீர், ம‌ழை என‌ சொன்ன‌வ‌னுக்கு
சொல்லுங்க‌ள்- புல‌ம்ப‌ல்க‌ளும் முக்கிய‌ம் என்று...